இரண்டு வருடங்களாக படப்பிடிப்புகள் நடைபெற்று வந்த வலிமை படத்தின் சூட்டிங் ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது.

Valimai Movie Shooting Wrapped : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தினை வினோத் இயக்க போனிகபூர் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

இரண்டு வருடங்களுக்குப் பிறகு முடிவுக்கு வந்த வலிமை.. வெகு விரைவில் அடுத்த கொண்டாட்டம் - ஹாட் அப்டேட்ஸ்.!!

படத்தின் படப்பிடிப்புகள் பல்வேறு இடங்களில் நடைபெற்று வந்தன. இறுதியாக முக்கியமான காட்சிகளை படமாக்க படக்குழு ரஷ்யா சென்றது. தற்போது ரஷ்யாவில் சூட்டிங்கை முடித்து வலிமை படத்தின் மொத்த படப்பிடிப்புகளையும் நிறைவு செய்துள்ளது படக்குழு.

விராட் கோலியை, பின்னுக்கு தள்ளினார் ரோகித் சர்மா : ஐசிசி ரேங்க் அறிவிப்பு

படம் தொடங்கி இரண்டு வருடங்கள் ஆன நிலையில் தற்போது ஒரு வழியாக படத்தின் சூட்டிங் முடிவுக்கு வந்துள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையில் ஏற்கனவே நாங்க வேற மாதிரி என்ற பர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் வெளியான நிலையில் அடுத்து இரண்டாவது சிங்கிள் டிராக் பாடல் வெகு விரைவில் வெளியாகும் எனவும் தகவல் கிடைத்துள்ளது.

என் கோரிக்கையை ஏற்ற ரசிகர்களுக்கு ரொம்ப நன்றி! – உருக்கமாக பேசிய விஷால் | Vishal Thanks to Fans