Valimai Movie Shooting Update
Valimai Movie Shooting Update

ஷூட்டிங் நடக்க தற்போது வாய்ப்பில்லை என்பதால் வலிமை திரைப்படம் ட்ராப் ஆகி விட்டதாக தகவல்கள் வைரல் ஆகி வருகின்றன.

Valimai Movie Shooting Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. வினோத் இயக்கி வரும் இந்தப் படத்தை போனி கபூர் தயாரிக்கிறார் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் நடந்து வந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஷூட்டிங் தடைப்பட்டு உள்ளன. கொரோனா வைரஸ் பரவல் முழுவதுமாக முடிந்து இயல்பு நிலைக்கு திரும்பிய பிறகுதான் ஷூட்டிங் தொடங்க வேண்டும் என அஜித் கூறியுள்ளார்.

இதன் காரணமாக இப்படத்தின் படப்பிடிப்புகள் மீண்டும் அடுத்த வருடம் ஜனவரியில் தான் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிகில் ஷூட்டிங் ஸ்பாட்டில் டிக் டாக், சாகசம் செய்து மாஸ் காட்டிய தளபதி – இதுவரை நீங்கள் பார்த்திராத வீடியோ!

இந்த நிலையில் வலிமை படக்குழு இப்படத்தை கைவிட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ஆனால் இது குறித்து விசாரிக்கையில் அது உண்மை இல்லை. யாரோ இவ்வாறு கிளப்பி விட்டுள்ளார்கள் என படக்குழு தெரிவித்துள்ளது. தற்போது வரை வலிமை படத்தின் படப்பிடிப்புகள் 60% முடிவடைந்துள்ளன.

இயல்பு நிலைக்கு திரும்பிய பின்னர் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கும். அதன் பின்னர் வெகுவிரைவில் படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது‌.