அஜித் படத்தில் இருந்து சில சீனியர் நடிகைகள் வெளியேறிவிட்டதாக அதிர்ச்சிகர தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

Valimai Movie Shocking Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் இறுதியாக நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தினை தொடர்ந்து அடுத்ததாக எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை படத்தில் நடித்து வருகிறார்.

அஜித் படத்தில் இருந்து வெளியேறிய சீனியர் நடிகர்கள் - வெளியான அதிர்ச்சித் தகவல்

இந்த படத்தின் படப்பிடிப்புகள் 90 சதவீதம் நிறைவடைந்து விட்டதாகவும் இன்னும் சில சண்டை காட்சிகள் மட்டுமே இருப்பதாக கூறப்பட்டு வந்தது. ஆனால் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது‌.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்த சில சீனியர் நடிகர்கள் படத்தை விட்டு விலகிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் நடித்த காட்சிகளை நீக்கிவிட்டு அவர்களுக்கு பதிலாக புதிய நடிகர்களை வைத்து படப்பிடிப்பை நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வலிமை படத்தின் ரிலீஸ் மேலும் தாமதமாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது.