வலிமைக்கு வழிவிட்டு தங்களுடைய அடுத்த தயாரிப்பின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது சன் பிக்சர்ஸ்.

Valimai Movie Release Details : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை இந்தத் திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே தினத்தில் தளபதி விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் திரைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்தத் திரைப்படம் கோடை விடுமுறையில் வெளியாகும் என தகவல் வெளியானது.

இன்றைய ராசி பலன்.! (20.11.2021 : சனிக் கிழமை)

இதனையடுத்து சூர்யாவின் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வலிமையுடன் மோதும் என பேசப்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் சூர்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படம் பிப்ரவரி 4-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

படம் வேற மாதிரி இருக்கு – Sabhaapathy Public Review

இதனால் பொங்கலுக்கு வலிமை திரைப்படம் சோலோவாக வெளியாகி வசூலில் சக்கைப்போடு போட போவது உறுதியாகி உள்ளது. இது அஜித் ரசிகர்களிடையே மிகப் பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.