வலிமை படம் பற்றி இரண்டு அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சி படுத்தி இருந்தாலும் அச்சமடையவும் செய்துள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் தற்போது எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம்ஸ் சிட்டி மற்றும் சென்னை கோகுலம் ஸ்டுடியோஸில் நடைபெற்றதை தொடர்ந்து சுஸர்லாந்தில் நடைபெற உள்ளதாம்.
அங்கு பைக் ரேஸ், கார் ரேஸ் ஆகியவை படமாக்கப்பட உள்ளன. இது அஜித் ரசிகர்களை சந்தோசப்படுத்தியுள்ளது.
அதே சமயம் அஜித் டூப் எல்லாம் போட மாட்டேன், நான் தான் நடிப்பேன் என அடம் பிடிப்பார் என்பது நமக்கே தெரியும். இது போன்ற ரிஸ்க்கான காட்சிகளில் நடித்த போது விபத்துகள் ஏற்பட்டு அறுவை சிகிச்சைகள் நடந்திருப்பதும் உலகம் அறிந்த ஒன்று.
இதனால் அஜித்திற்கு எதுவும் நடந்து விட கூடாது, அவர் பாதுகாப்பாக இந்த காட்சிகளில் நடித்து முடித்து விட வேண்டும் என பதைபதைப்பும் பயமும் ரசிகர்கள் மத்தியில் ஒட்டி கொண்டுள்ளது.