Valimai Movie New Releases Plan
Valimai Movie New Releases Plan

தல அஜித்தின் வலிமை அண்ணாத்த படத்துடன் மோதும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அப்படி மோதாது என்பது தெரியவந்துள்ளது.

Valimai Movie New Releases Plan : தமிழ் சினிமாவில் தனகென்று ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டு இருப்பவர் அஜித். தற்போது இவரது நடிப்பில் வலிமை திரைப்படம் உருவாகி வருகிறது.

ஊரடங்கு உத்தரவு காரணமாக இப்படம் பாதியிலேயே நின்று விட்டது. இதனால் தீபாவளிக்கு ரிலீசாகும் என கூறப்பட்டு வந்த வலிமை தள்ளிப் போவது உறுதியாகி விட்டது.

ரொம்ப நடிக்காத.. உனக்கு குற்ற உணர்ச்சியே இல்லையா? முன்னழகை காட்டிய ஷெரினை விளாசிய ரசிகர்கள் – காரணம் என்ன?

மேலும் இப்படம் பேட்ட, விஸ்வாசம் மோதிக் கொண்டது போல அண்ணாத்த படத்துடன் மோதும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இப்படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு ஜூலையில் தான் தொடங்கவுள்ளது. இதனால் ஜனவரிக்குள் படத்தை முடித்து ரிலீஸ் செய்வது என்பது சாத்தியமில்லை.

இதன் காரணமாக படத்தை 2021 கோடை விடுமுறையில் வெளியிட படக்குழு முடிவு எடுத்துள்ளது. இதற்கு அஜித்தும் சம்மதம் தெரிவித்துள்ளார்.