வலிமை படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி அஜித் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.
Valimai Movie Making Video : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.
வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் இந்த திரைப்படம் உருவாகி உள்ளது. இதை படத்தின் மேக்கிங் வீடியோ இன்று வெளியாகும் என சொல்லப்பட்டு வந்த நிலையில் தற்போது அதிகாரபூர்வமாக இந்த படத்தின் மேக்கிங் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இதனால் ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களும் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.