தல அஜித்தின் வலிமை படம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

Valimai movie Latest Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் வலிமை திரைப்படம் வெளியாக உள்ளது.

H வினோத் இயக்கத்திலும், போனி கபூர் தயாரிப்பில், உருவாகி வரும் இந்த திரைப்படம் இரண்டு வருடங்கள் ஆகியும் எந்த ஒரு அப்டேட் டையும் வெளியிடவில்லை.

இதனிடையே ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் கொரோனா காரணமாக அதுவும் வெளியாகவில்லை.

இது தல ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. வலிமை திரைப்படம் தாமதமாவதற்கு முக்கிய காரணம் ஒன்று வெளியாகியுள்ளது.

இறுதிகட்ட படப்பிடிப்புகள் வெளிநாட்டில் நடந்து வரும் நிலையில் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் கொரோனா தொற்று பரவல் காரணமாக விலகியதால் படப்பிடிப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக வினோத் கூறியுள்ளார்.

இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.