முதல் முறையாக வலிமை படத்தை பற்றிய மாஸான அப்டேட்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.
தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித் நடிப்பில் எச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. இந்த படத்தை பற்றிய அப்டேட் கூட சமீப காலமாக வரவில்லை.
இந்நிலையில் தற்போது இப்படத்தை பற்றிய செம அப்டேட்கள் இணையத்தில் கசிந்துள்ளன. அதாவது இந்த படத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடிக்கிறாராம்.
ஒன்று போலீஸ் இன்னொன்று மங்காத்தா வில்லன் கதாபாத்திரம் போன்ற கெட்டப். மேலும் இப்படம் குடும்ப பாசம் கலந்த செண்டிமெண்ட் படமாக இருக்கும் என கூறப்படுகிறது.
மேலும் இதில் இன்னொரு ஸ்பெஷல் என்னவென்றால் தீரன் படத்தை விட இப்படத்தில் ஆக்ஷன் இன்னும் தூக்கலாக இருக்கும் எனவும் கூறுகின்றனர்.