Valimai Movie Actors Details
வலிமை படத்தில் பிரபல நடிகரின் மகன் இணைந்திருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

Valimai Movie Actors Details : தல அஜித் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக யாமி கௌதம் மற்றும் ஹீமா குரோஷி ஆகியோர் நடிக்கின்றனர்.

மேலும் வில்லனாக RX 100 படத்தின் ஹீரோ கார்த்திகேயா நடிப்பதாக ஏற்கனவே தகவல்கள் கசிந்திருந்தன.

அதுமட்டுமில்லாமல் தற்போது பிரபல நடிகரான பானு பிரகாஷின் மகன் ராஜ் ஐயப்பாவும் இப்படத்தில் இணைந்துள்ளார்.

ராஜ் ஐயப்பா அதர்வாவின் 100 படத்தில் வில்லனாக நடித்திருந்தார். தற்போது இவர் இப்படத்தில் 3 வில்லன்களில் ஒருவராக நடித்து வருவதாகவும் இல்லை அவர் அஜித்துக்கு தம்பியாக நடித்து வருவதாகவும் கூறப்பட்டு வருகிறது.

ராஜ் ஐயப்பா அஜித்துக்கு தம்பியாக நடிக்கிறாரா? இல்ல வில்லனாக நடிக்கிறாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Raj Aiyappa

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.