இவ்வளவு நாள் காத்திருப்புக்கு தப்பே இல்லை என்பது போல வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Valimai Motion Poster Video : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

படத்தின் படப்பிடிப்புகள் கொரோனாவுக்கு பிறகு தற்போது மீண்டும் ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாக இந்த படம் பற்றி எந்தவித அப்டேட்டையும் படக்குழு வெளியிடாமல் இருந்து வருகிறது.

டென்னிஸ் பரபரப்பு : இன்று 20-வது பட்டத்தை வெல்வாரா ஜோகோவிச்? 

இவ்வளவு நாள் காத்திருப்பு தப்பே இல்லை.. இணையத்தை தெறிக்க விடும் வலிமை மோஷன் போஸ்டர் - தரமான சம்பவம்.!!

இந்த நிலையில் இன்று மாலை 6 மணிக்கு வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகும் என்பதுபோல நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியாகியது.

அதன்படி தற்போது செம மாஸாக வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் இணையத்தில் வெளியாகி உள்ளது. இவ்வளவு காத்திருப்பு தப்பே இல்லை, தரமான சம்பவம் இருககு என அஜித் ரசிகர்கள் வலிமை படத்தினை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

Lightman மடியில Thala Ajith படுத்துட்டு இருந்தாரு! – Actress Vijayalakshmi Live Chat