3-வது டோஸ் தடுப்பூசி போட வேண்டுமா? : பேரவையில் அதிகாரப்பூர்வ தகவல்

Ajith-திற்கு இப்படி ஒரு பாராட்டா! - Gift கொடுத்து அசத்திய ரஷ்ய டிரைவர் | Valimai Update

AValimai Latest Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவர் நடிகர் மட்டுமல்லாமல் பைக் ரைடர், பைலட், கார் ரேஸர் என பல திறமைகளைக் கொண்டவர் என்பது அனைவரும் அறிந்ததே.

இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்தில் ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். படத்தினை சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை பார்வை உள்ளிட்ட படங்களை இயக்கிய வினோத் இயக்கி வருகிறார்.

கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக நடைபெற்று வந்த இந்த படத்தில் கடைசி கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற்று முடிந்தது. இதனையடுத்து சமீபத்தில் படக்குழு சென்னை திரும்பியது.

ஆனால் தல அஜித் இந்தியா திரும்புவதற்கு முன்பாக ரஷ்யாவில் பைக்கில் 5 ஆயிரம் கிலோ மீட்டர் சுற்றிப் பார்த்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே லைக்குகளை குடித்து வருகின்றன.