Valimai in OTT Release
Valimai in OTT Release

அமேசான் நிறுவனம் வலிமை படத்திற்காக கோடிகளில் வியாபாரம் பேசி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உளளன.

Valimai in OTT Release : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவர் தற்போது எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகிவரும் வலிமை என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் சென்னை மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் விறுவிறுப்பாக நடந்து வந்தன. இதுவரை 65 சதவீதம் இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து இருப்பதாக கூறப்படுகிறது.

கொஞ்சம் கூட அட்ஜஸ்ட் பண்ணாத ரஜினி.. விரக்தியில் சன் பிக்சர்ஸ்?? – அண்ணாத்த படத்தில் நடந்தது என்ன?

இந்த நிலையில் இப்படத்தினை OTT வழியாக வெளியிட்ட அமேசான் நிறுவனம் தயாரிப்பு நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. மேலும் பல கோடிகளை கொடுத்து படத்தை வாங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

ஆனால் போனிகபூர் வலிமை திரைப்படம் வெளியானால் நிச்சயம் தியேட்டரில் தான் வெளியாகும். OTT தளத்தில் வெளியிட எனக்கு விருப்பமில்லை என ஏற்கனவே கூறியிருந்தார்.

இருப்பினும் தற்போது வலிமை திரைப்படம் OTT வழியாக வெளிவிட பல நிறுவனங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.