Valimai First Look Release
Valimai First Look Release

வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் குறித்த தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

Valimai First Look Release : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை.

இந்தப் படத்தை இயக்குநர் வினோத் இயக்க போனி கபூர் தயாரித்து வருகிறார். மேலும் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களும் இந்த படத்திற்கும் படத்தின் அப்டேட்டிற்காகவும் தான் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் அஜித் தற்போது உள்ள சூழ்நிலையில் படத்தின் எந்தவித விளம்பரத்திலும் ஈடுபட வேண்டாம் என கூறியிருந்தார்.

காந்தாரியின் சாபத்தால் பாண்டவர்கள் அழிந்த கதை தெரியுமா ? – வாங்க பார்க்கலாம்

இந்த நிலையில் தற்போது சூழ்நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருவதால் படத்தின் அப்டேட்டை வெளியிடலாமா என கேட்டதற்கு அஜித் பச்சைக்கொடி காட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஆயுத பூஜையை முன்னிட்டு வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

மேலும் படத்தை அடுத்த வருட (2021) தீபாவளிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என கோலிவுட் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

இதனால் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்திற்கு ஆயத்தமாகி வருகின்றனர்.