Valimai First Look Release Update

வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் எப்போது வெளியாகும் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Valimai First Look Release Update : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் ஹூமா குரோஷி நாயகியாக நடிக்க தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாக நடித்து வருகிறார்.

கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாக இந்த படத்தில் அப்டேட் எதுவும் வெளியாகாததால் ரசிகர்கள் அனைவரும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது வெளியாகும் என எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பை முழுவதுமாக முடித்த பின்னரே ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்த மாதம் இந்த படத்தின் படப்பிடிப்புகள் முற்றிலுமாக முடிவடைந்து விடும். அதன் பின்னர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என நம்பத் தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் கிடைத்துள்ளது.