Valimai First Look Update

மார்ச் 12ஆம் தேதி வலிமை படத்தின் பஸ்ட் லுக் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என தகவல்கள் கசிந்துள்ளன.

Valimai First Look Release Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். சினிமா பின்புலம் இல்லாமல் அமராவதி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர் தன்னுடைய விடாமுயற்சி மற்றும் தன்னம்பிக்கையால் பல தடைகளையும் தோல்விகளையும் தாண்டி இன்று உச்ச நடிகராக இடம் பிடித்துள்ளார். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை எச் வினோத் இயக்க போனி கபூர் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

இந்த படம் தொடங்கி படத்தின் தலைப்பு வலிமை என அறிவிக்கப்பட்டதுடன் கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாக எந்தவித அப்டேட்டில் கொடுக்காமல் படக்குழு அமைதி காத்து வருகிறது. இதனால் கடுப்பான அஜித் ரசிகர்கள் அனைத்து பலன்கள் அரசியல் தலைவர்கள் என பார்ப்போர் எல்லோரிடமும் வலிமை அப்டேட் எப்போது என கேட்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பற்றிய தகவல் கிடைத்துள்ளது. அதாவது வரும் மார்ச் 12ஆம் தேதி வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் எப்போது வெளியாகும் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

அஜித் ரசிகர்களுக்கு செமக் கொண்டாட்டம்.. மார்ச் 12-ல் வலிமை ஃபர்ஸ்ட் லுக் அப்டேட்??

ஒன்றரை வருடங்களாக வலிமை படத்தின் அப்டேட் எதுவும் வெளியாகவில்லை என்றாலும் அஜித் ரசிகர்களை குஷியாக்கி கொண்டாட வைக்கும் வகையில் அஜித் தொடர்ந்து பல சாதனைகளை படைத்து வருகிறார். சமீபத்தில்கூட 46வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றிருந்தார். இதற்கு திரையுலக பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை அனைவரும் வாழ்த்து கூறியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் கடந்த ஒரு மாதமாகவே அஜித்தின் புகைப்படங்கள் அடிக்கடி இணையத்தில் வெளியாகி தல ரசிகர்களை உற்சாகமூட்டி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது