கொரானா தொற்று காரணமாக வலிமை படத்தின் அப்டேட் தள்ளிப் போன நிலையில் தற்போது எப்போது வெளியாகும் என்ற கேள்வி எழ தொடங்கியுள்ளது.

Valimai First Look Release : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

கொரானாவில் இருந்து மீண்டு வரும் தமிழகம், தள்ளிப்போன வலிமை ஃபர்ஸ்ட் லுக் எப்போது ரிலீஸ்??

படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அஜித்தின் பிறந்த நாளான மே ஒன்றாம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் அனைவரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது கொரானா பாதிப்பில் இருந்து தமிழகம் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது தல அஜித் ரசிகர்கள் வலிமைப்படுத்தும் எப்போது வெளியாகும் என கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர்.

நிலைமை சீராகி கொண்டே வருகிறது நீங்கள் சொன்னபடி வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடுங்கள் என தயாரிப்பாளருக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். இதனால் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் மிக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.