Valimai First Look Coming Soon

வலிமை இன் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகும் என போனி கபூர் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Valimai First Look Coming Soon : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கியுள்ள இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்தத் திரைப்படம் தொடங்கி ஒன்றரை வருடங்கள் ஆகியும் எந்த ஒரு அப்டேட்டும் படக்குழு வெளியிடவில்லை. இதனால் ரசிகர்கள் மிகவும் சோகத்தில் இருந்து வந்தனர்.

ஏற்கனவே பிப்ரவரி 15ஆம் தேதி வலிமை திரைப்படம் ஒரு அளவிற்கு முடிவடையும் என்று அறிவித்திருந்த போனிகபூர் தற்போது விரைவாக ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று அறிவித்து உள்ளார். இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

மேலும் வலிமை அப்டேட்டை பிரதமர் மோடியிடம் தல ரசிகர்கள் கேட்ட வீடியோ வைரலாக பரவியது.