Valimai First Look and Teaser Release Update

வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் எப்போது ரிலீஸ் என்பது குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

Valimai First Look and Teaser Release Update : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை.

எச் வினோத் இயக்க போனிகபூர் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வரும் இந்த படத்திற்காக ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் ஆகியவை எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் கடந்த ஒன்றரை வருடங்களாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் தற்போது வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் ஏப்ரல் 25ஆம் தேதி வெளியாகும் எனவும் வலிமை படத்தின் டீசர் அஜீத்தின் பிறந்த நாளான மே 1ம் தேதி வெளியாகும் எனவும் நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் கிடைத்துள்ளன.

இந்த தகவலால் அஜித் ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்தனர்.