வலிமை படத்தை முதல் நாள் முதல் காட்சி எப்போது ரிலீஸ் ஆகும் என்பது குறித்த தகவல் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Valimai FDFS Show Time Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வலிமை. எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தினை போனி கபூர் தயாரிக்கிறார். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் இருந்து வெளியான நாங்க வேற மாதிரி மற்றும் அம்மா பாடல் என இரண்டுமே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று தான் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை எப்போது ரிலீஸ் என அதிகாரப்பூர்வமாக தேதி அறிவிக்கப்படவில்லை.

இன்று கனமழை பொழியும் மாவட்டங்கள் : ஆய்வு மையம் தகவல்

இருப்பினும் தற்போது வலிமை படத்தின் சிறப்பு காட்சி இரவு ஒரு மணிக்கு வெளியாகும் என தகவல் கிடைத்துள்ளது. இதன் காரணமாக ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களும் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். அஜித் தரிசனத்திற்காக ஆவலோடு காத்துக் கொண்டிருப்பதாக கமெண்ட்டுகளில் கூறி வருகின்றனர்.

அவர்தான் எனக்கு வாய்ப்பு கொடுத்தாரு – மேடையில் Live ஆக பாடிய Sivangi! | Anandham Vilayadum Veedu

வலிமை படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.