வலிமை திரைப்படம் எந்தெந்த இடங்களில் தோல்வியை தழுவியது என்பது குறித்த விவரங்கள் தெரிய வந்துள்ளன.

Valimai Failure Areas List : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் வலிமை. இந்தப் படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் வசூல் தொடர்ந்து வெற்றி நடை போட்டு 200 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.

இப்படியான நிலையில் இந்த படம் சில இடங்களில் மட்டும் தோல்வியை தழுவியுள்ளது. அது எந்தெந்த இடம் அந்த ஏரியாவில் எவ்வளவு வசூல் என்பது குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளன.

1. கேரளா – ரூபாய் 3.5 கோடி

2. யுஎஸ்ஏ கனடா – ரூபாய் 3.8 கோடி

3. யூரோப் – ரூபாய் 4 கோடி

4. ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளில் இந்த படம் சுமாரான வெற்றியையே பெற்றுள்ளன.

ஆனால் தமிழகம் உட்பட மற்ற இடங்களில் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.