வலிமை திரைப்படம் முழுவதுமாக முடிவடைந்த நிலையில் கொரானாவின் இரண்டாம் அலை அதற்கு சிக்கலை உருவாக்கி உள்ளது.

Valimai Climax Shooting Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் வெற்றி பெற்ற திரைப்படம் நேர்கொண்ட பார்வை. எச் வினோத் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் பெரும் வெற்றியைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து இன்று அதே கூட்டணியுடன் இணைந்து வலிமை படத்தில் நடித்து வருகிறார் தல அஜித். இந்த படத்தின் படப்பிடிப்புகள் சென்னை ஐதராபாத் என்று பல்வேறு இடங்களில் நடைபெற்று கிட்டத்தட்ட 90 சதவீத படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளன.

கொரானாவால் சிக்கி தவிக்கும் வலிமை படக்குழு - கடைசி நேரத்தில் வந்த சோதனை.!!

படத்தினை ஆகஸ்ட் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது. படத்தில் கிளைமாக்ஸ் காட்சிகளை ஐரோப்பா நாட்டில் படமாக்க இருந்தது. இப்படியான நிலையில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை இந்தியாவில் தீவிரமடைந்துள்ளதால் படக்குழு என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகிறது. ஐரோப்பிய நாட்டில் இந்தியாவில் இருந்து வருபவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகளை படமாக்க காத்திருக்கலாமா அல்லது உள்ளூரிலேயே சூட்டிங்கை முடித்து விடலாமா என படக்குழு ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.