Valimai Climax Fight Sequence Secrets
Valimai Climax Fight Sequence Secrets

வலிமை படத்திலும் தல அஜித் காட்சி ஒன்றில் விவேகம் ஸ்டைலில் மாஸ் காட்டப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Valimai Climax Fight Sequence Secrets : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் வலிமை என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை இயக்குனர் வினோத் இயக்க போனி கபூர் தயாரித்து வருகிறார்.

ரசிகர்கள் அனைவரும் இப்படத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். படத்தின் படப்பிடிப்புகள் 50 சதவீதம் மட்டுமே நிறைவடைந்துள்ளன. ஊரடங்கு உத்தரவும் முடிந்ததும் படத்தின் படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கும் என கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தற்போது வலிமை படத்தின் கிளைமேகஸ் சீக்ரெட் ஒன்று வெளியாகியுள்ளது. இதில் விவேகம் படம் மேஜிக் ஒன்று இடம்பெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான விவேகம் படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் அஜித் சட்டை இல்லாமல் இருப்பார் அந்த காட்சி படத்தின் க்ளைமாக்ஸில் இடம் பெற்றிருக்கும். இதற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது.

அதேபோல் வலிமை படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் அஜித்தும் படத்தில் வில்லனாக நடித்து வரும் கார்த்திகேயாவும் சட்டையில்லாமல் சண்டையிடும் காட்சி ஒன்று இடம் பெற்றிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

இதற்காக தல அஜித் மெனக்கெட்டு உடலமைப்பை கட்டுக்கோப்பாக மாற்றி உள்ளார் எனவும் கூறப்படுகிறது. மேலும் படத்தில் நிச்சயம் இந்த காட்சி ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களுக்கும் ஸ்பெஷல் விருந்தாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கலாம்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.