வலிமை திரைப்படம் ரூபாய் 200 கோடி வசூலை நெருங்கி வந்தாலும் இரண்டு இடங்களில் தோல்வியை தழுவியுள்ளது.

Valimai BO Report in Overseas : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் வலிமை. வினோத் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தை போனி கபூர் தயாரித்திருந்தார்.

படம் உலகம் முழுவதும் நல்ல வசூலை பெற்று வரும் நிலையில் ஒரு வார முடிவில் 194 கோடி வசூலை தாண்டியுள்ளது. ஆனாலும் இந்தப்படம் இரண்டு இடங்களில் தோல்வியைத் தழுவி இருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாவது ஓவர்சீஸ் நாடுகளான அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் வலிமை திரைப்படம் தோல்வியை தழுவியதாக சொல்லப்படுகிறது. அதே சமயம் மலேசியா மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இந்த படம் தொடர்ந்து வெற்றி நடைபோட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.