வலிமை படத்தில் அஜித் ஓட்டிய பைக்கை சூர்யா மற்றும் விஜய் போன்ற நடிகர்களால் ஓட்ட முடியாது என கூறப்பட்டு வருகிறது.

Valimai Bike Stunts Secrets : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து மீண்டும் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் இணைந்து நடித்து வரும் திரைப்படம் தான் வலிமை.

இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஹீமா குரோஷி நடிக்க யோகி பாபு, விஜய் டிவி புகழ் உள்ளிட்ட பல நடிகர்கள் இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்துள்ளனர்.

ஒன்றரை வருடங்களுக்கு பிறகு இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் ஆகியவை கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியானது. பெரும்பாலான காட்சிகளில் பைக்குடன் தான் தல அஜித் இருந்தார்.

இந்த படத்தில் எம்வி அகுஸ்ட்டா RR புரூட்டேல் 800 (பழைய மாடல்) பைக்கைத்தான் பெரும்பாலான காட்சியில் பயன்படுத்தியுள்ளாராம். இந்த பைக்கின் அதிகபட்ச வேகம் 244 கிமீ. இந்த பைக்கைக் கையாள்வதற்குக் கொஞ்சம் கட்டுமஸ்த்தாக இருந்தால் தான் முடியும். காரணம், இதன் எடை 175 கிலோ. இதன் சீட் உயரம் 830 மிமீ, இதனால் உயரம் குறைவானார்கள் ஓட்டுவதும் சிரமம்.

இதன் காரணமாக சூர்யா, விஜய் உள்ளிட்டோர் இந்த படத்தினை ஓட்டுவது மிகக் கடினம் என கூறப்படுகிறது. அஜித் எடை மற்றும் உயரம் என அனைத்திலும் சரியாக இருப்பதாலும் பைக் ஓட்டுவதில் கில்லாடி என்பதன் காரணத்தாலும் இந்த பைக்கை அவர் எளிதாக ஓட்டி விட்டார் என கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.