பீஸ்ட், கே ஜி எஃப் 2 படங்களுக்கு இடையே அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளனர்.
Valimai 50th Day Celebration : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் வலிமை. இந்த படத்தை வினோத் இயக்க போனிகபூர் தயாரித்திருந்தார்.

உலகம் முழுவதும் 5 மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றியைப் பெற்றது. இந்த நிலையில் இந்தத் திரைப்படம் வெளியாகி நாளையோடு 50 நாட்கள் ஆக உள்ளது.

இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகம் அடைந்து சமூக வலைதளங்களில் இதனை கொண்டாடி வருகின்றனர். பீஸ்ட், கே ஜி எஃப் 2 படத்தின் ரிலீசுக்கு நடுவே வலிமை ட்ரெண்டிங்கில் இடம்பிடித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.