Valampuri Sangu

ValamPuri Sangu : உங்கள் வீட்டில் வலம்புரி சங்கு உள்ளதா? இப்படி பூஜை செய்து பாருங்கள், குபேரன், மகாலட்சுமி அருள் கிடைக்கும்.

திருமாலின் ஆயுதங்களில் ஒன்றான சங்கு, வழிபாட்டிற்கு உரியதாகக் கருதப்படுகிறது. அதிலும் குறிப்பாக கிடைப்பதற்கு அரிய வலம்புரிச் சங்கினை வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.

வழிபடும் முறைகள் :

1. ஒரு வீட்டில் வலம்புரிச் சங்கினை அலங்காரமாக வைத்திருந்தால் குபேரன் அருள், மகாலட்சுமியின் அருள் கிடைத்து, மகா லட்சுமி நித்தியவாசம் செய்வாள் என்பது ஐதீகம்.

2. அதிகக் கடன்பட்டவர்கள் பௌர்ணமி தோறும் சங்குக்கு குங்கும அர்ச்சனை செய்துவர உடனே கடன் தீரும்.

3. சுத்தமான, உண்மையான வலம்புரிச் சங்கு பூஜிக்கப்படும் வீட்டில் பில்லி சூன்யங்கள், ஏவல்கள் நெருங்காது.

4. பிறந்த குழந்தைக்கு காய்ச்சல் வந்தால், சங்கில் நீர்விட்டு ருத்ராட்சம்
இட்டு, அதில் ஊறிய நீரை குழந்தைக்கு கொடுக்க காய்ச்சல் நீங்கும்.

5. ஒரு தெய்வத்துக்கு சங்கால் அபிஷேகம் செய்வதால் 10 பங்கு அபிஷேகம் செய்த பலனைப் பெறமுடியும்.

6. வாஸ்து தோஷம் உள்ள வீட்டில் துளசி தீர்த்தத்தை சங்கில் இட்டு பிரதி வெள்ளி தோறும் தெளித்து வர தோஷம் விலகி நலம் உண்டாகும்.

7. செவ்வாய் தோஷம் உள்ள பெண்கள் செவ்வாய் தோறும் வலம்புரிச்சங்கில் பால் வைத்து அங்காரக பூஜை செய்ய தோஷம் விலகி திருமணம் நடந்துவிடும்.

8. பூஜை அறையில் ஒரு தட்டில் அரிசி பரப்பி அதில் சங்கை வைத்து பூ, பொட்டிட்டு வணங்கி வந்தால் உணவுப் பஞ்சமே வராது.

9. வலம்புரி சங்கில் வைத்த தீர்த்தத்தைக் கொண்டு, வந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்தாலும், நமக்கு உள்ள தோஷம் நீங்கிவிடும்.

10. வலம்புரிச் சங்கில் துளசி தீர்த்தம் இட்டு பூஜை செய்து, மங்கள ஸ்நானம் செய்தால் நமக்கு பிரம்மகத்திதோஷம் இருப்பின் நீங்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here