Master Release Date Details
மாஸ்டர் ஏப்ரல் 9-ம் தேதி நிச்சயமாக ரிலீஸ் ஆகாது என திரையுலக பத்திரிகையாளர்கள் இருவர் நமக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளனர்.

Valaipechu Team Interview : தமிழ் சினிமாவில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படம் உலகம் முழுவதும் ஏப்ரல் 9-ம் தேதி திரைக்கு வரும் என படக்குழுவினர் கூறியிருந்தனர்.

ஆனால் தற்போது கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக நிச்சயமாக படம் வெளியாகாது என ஏற்கனவே நாங்கள் கூறி இருந்தோம்.

எவ்வளவோ பேர் கோர்ட் சூட் போடுறாங்க, விஜய் ஏன் அஜித் பெயரை சொன்னார்? – பிரபல தயாரிப்பாளர் அதிரடி பேட்டி

இந்நிலையில் புகழ் பெற்ற இரண்டு பத்திரிகையாளர்களான பிஸ்மி, அந்தணன் ஆகியோரை பேட்டி எடுத்த போது அவர்களிடம் மாஸ்டர் ரிலீஸ் குறித்து கேட்டோம்.

ஓவர்சீஸ் உட்பட அனைத்து இடங்களிலும் ஒரே நேரத்தில் தான் மாஸ்டர் படம் ரிலீசாகும், ஆனால் தற்போது உலக நாடுகள் அனைத்தும் தியேட்டர்களை மூடியுள்ளன.

படத்தை அதிக விலை கொடுத்து வாங்கிய விநியோகிஸ்தர்கள் குறைவான தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய ஒப்பு கொள்ள வாய்ப்பில்லை. இதனால் மாஸ்டர் நிச்சயமாக தள்ளி போகும் என்று கூறியுள்ளனர்.

இதோ அவர்கள் கொடுத்த பேட்டி வீடியோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.