தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை மற்றும் பிங் படத்தின் தெலுங்கு ரீமேக்கான வக்கீல் சாப் படத்தில் அஞ்சலியும் நிவேதா தாமஸும் இணைந்துள்ளனர்.

Vakheel Saab Movie Update : பாலிவுட் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளராக வலம் வருபவர் போனி கபூர். இவர் இந்தியில் அமிதாப்பச்சன், டாப்ஸி ஆகியோர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படமான பிங்க் படத்தை தமிழில் அஜித்தை வைத்து ரீமேக் செய்தார்.

எச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் வெளியான இப்படம் ரூபாய் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து நல்ல லாபத்தை கொடுத்தது.

இதனையடுத்து போனி கபூர் இந்த படத்தை தெலுங்கிலும் ரீமேக் செய்து வருகிறார். பவர் ஸ்டார் பவன் கல்யாண் இந்த படத்தில் வழக்கறிஞராக நடிக்கிறார்.

Pawan Kalyan Movie

முக்கியமான வேடத்தில் நடிகை அஞ்சலி, நிவேதா தாமஸ் ஆகியோர் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர். மேலும் இன்னொரு நடிகையாக பிங்க் மற்றும் நேர்கொண்டபார்வை படத்தில் நடித்த ஆண்ட்ரியாவே நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தின் புதிய போஸ்டர் பவன் கல்யாண் பிறந்தநாள் அன்று அதிகாரப்பூர்வமாக வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித் ரசிகர்கள் மற்ற படங்களை பற்றிய அப்டேட்டுகளை கொடுக்க முடிகிறது ஆனால் வலிமை படத்தின் அப்டேட் மட்டும் கொடுக்க தெரியலையா என போனி கபூரை விமர்சனம் செய்து வருவதும் அனைவரும் அறிந்ததே.