vaiko Status in MP Election : Sports News, World Cup 2019, Latest Sports News, World Cup Match, India, Sports, Latest News

vaiko Status in MP Election :

சென்னை: மாநிலங்களவை எம்பி தேர்தலில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மனு ஏற்கப்பட்டுள்ளது.

மேலும் திமுக, அதிமுக, பாமக ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் 6 பேரின் வேட்பு மனுக்களும் ஏற்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு 6 எம்பிக்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். ஒரு எம்பியை தேர்வு செய்ய 34 எம்எல்ஏக்கள் வாக்களிக்க வேண்டும்.

பேரவையில் தற்போதைய நிலையில் திமுக, அதிமுகவுக்கு தலா 3 எம்பிக்களை தேர்வு செய்ய முடியும்.

அதில் திமுக கூட்டணியைப் பொறுத்தவரை மதிமுகவுக்கு ஒரு சீட் ஒதுக்கட்டு, அதில் வைகோ போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி கடந்த 6ம் தேதி அன்று, திமுக சார்பில் தொமுச பொதுச் செயலாளர் சண்முகம், வக்கீல் வில்சன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

மேலும் அதிமுகவில் கூட்டணி கட்சியான பாமகவுக்கு ஒரு சீட் ஒதுக்கப்பட்டது. அதில் அன்புமணி போட்டியிடுவதாக அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் முகமது ஜான், மேட்டூர் நகர செயலாளர் சந்திரசேகரன், பாமக அன்புமணி ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் வைகோவுக்கு தேச துரோக வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் அவரது மனு ஏற்கப்படுமா என்ற கேள்வி அனைவரிடத்திலும் எழுந்தது.

இதனால் திமுக சார்பில் மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ நேற்றுமுன்தினம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

அதை தொடர்ந்து டாக்டர் கு.பத்மராஜன், கோ. மதிவாணன், அக்னிராமச்சந்திரன், நடராஜன் ஆகிய 4 சுயேட்சைகளும் மனு தாக்கல் செய்தனர்.

இவர்களுக்கு எம்எல்ஏக்கள் முன் மொழியாததால் 4 மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன என்பது குறிப்பிடதக்கது. மேலும் அரசியல் கட்சிகளின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட 7 மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டது.

இந்நிலையில் நேற்று காலை 11 மணிக்கு சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அறையில் மனுக்கள் பரிசீலனை தொடங்கியது.

அதில் திமுக சார்பில் வக்கீல் வில்சன், சண்முகம், என்.ஆர்.இளங்கோ, அதிமுக சார்பில் வழக்கறிஞர் பாபு முருகவேல், பாமக வழக்கறிஞர் பாலு, மதிமுக சார்பில் வழக்கறிஞர் தேவதாஸ், மக்கள் தொடர்பு அலுவலர் நன்மாறன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதன் முடிவில் திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, சண்முகம், வில்சன், என்.ஆர்.இளங்கோ, அதிமுகவின் முகமது ஜான், சந்திரசேகரன், அன்புமணி ஆகிய 7 பேரின் மனு ஏற்கப்பட்டதாக சட்டப்பேரவை செயலாளர் அறிவித்துள்ளார்.

இது குறித்து சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன், தமிழக சட்டப்பேரவையின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை வாக்காளர்களாக கொண்டு,

மாநிலங்களவைக்கு 6 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க நடைபெறும் தேர்தலுக்காக வரப்பெற்ற வேட்புமனுக்கள் மொத்தம் 14 மனுக்கள் பெறப்பட்டன.

திருவாரூர் இடைத்தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் போட்டியா?

அதில், வைகோ, மு.சண்முகம், பு.வில்சன், என்.ஆர். இளங்கோ, அன்புமணி, சந்திரசேகரன், முகமது ஜான் ஆகிய 7 வேட்பாளர்கள் அளித்த வேட்புமனுக்கள் செல்லத்தக்கவை என அறிவிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நாளை வேட்பு மனு வாபஸ்பெற கடைசி நாள் என்ற நிலையில், 18ம் தேதி தேர்தல் நடைபெறுமா(?) என்பது நாளை மறுநாள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது..

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.