Vaiko against Narendra Modi
Vaiko against Narendra Modi

Vaiko against Narendra Modi – “பிரதமர் மோடி நாட்டிற்கு சாபகேடு மற்றும் ஆளுநர் தமிழகத்திற்கு சாபகேடு” என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் பேசினார்.

அவர் கூறியதாவது, “முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு பரிந்துரை செய்தது.

இதற்கு நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மீது நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

மேலும் பேருந்து எரிப்பு வழக்கில் 3 அப்பாவி மாணவிகள் உயிரிழப்புக்கு காரணமான கொலை குற்றவாளிகளை விடுதலை செய்யும் ஆளுநர், எந்த தவறும் செய்யாத 7 அப்பாவிகளை விடுதலை செய்ய மறுப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.

இதனை கண்டித்து நாளை போராட்டம் செய்ய இருக்கிறோம். இதில் நாங்கள் அனுமதி கேட்ட இடம் வரை, போலீசார் அனுமதி தர மறுத்தால்,

ஜல்லிக்கட்டு போல் மிகப்பெரிய அளவில் இது போராட்டமாக மாறும் என்று கூறினார்.

“தமிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கும் போது ஆளுநர் அத்துமீறி செயல்படுகிறார் என்றும் பிரதமர் மோடி நாட்டிற்கு சாபகேடு, ஆளுநர் தமிழகத்திற்கு சாபகேடு” என்றும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.