Vaibhav Tweet

Vaibav Tweet : நீங்க தல ரசிகனா? தளபதி ரசிகனா? என கேள்வி எழுப்பியதற்கு வைபவ் அளித்துள்ள பதில் தல தளபதி ரசிகர்களிடையே பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் அஜித்துடன் மங்காத்தா படத்தில் நடித்து பிரபலமானவர் வைபவ். இந்த படத்திற்கு பிறகு தற்போது ஹீரோவாகவும் கலக்கி வருகிறார்.

இவர் சமீபத்தில் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடியுள்ளார். அப்போது ரசிகர் ஒருவர் நீங்க தல ரசிகனா தளபதி ரசிகனா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு வைபவ் தளபதி ரசிகன், தலையோட மிக பெரிய ரசிகன் என பதிலளித்துள்ளார். இதனால் தளபதி ரசிகர் ஒருவர் இதற்கு நீங்க தல ரசிகனே சொல்லி இருக்கலாம் என கூறியுளளார்.

தல ரசிகனு சொல்லிட்டு போகலாமே எதுக்கு தளபதியை இழுக்கனும் என மற்றொரு தளபதி ரசிகர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனால் தல தளபதி ரசிகர்களிடையே வைபவ்வால் ஒரு சண்டை உருவாகியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.