வேழம் படத்தின் பாடலை FM நிலையத்தில் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் பாடலை ரசிகர்கள் ரசித்து கேட்டு வருகின்றனர்.

‘ஓ மை கடவுளே’ என்ற படத்தைத் தொடர்ந்து அசோக் செல்வனின் நடிப்பில் தற்போது வெளியாக இருக்கும் படம்  தான் ‘வேழம்’. இந்தப்படத்தை அறிமுக இயக்குனர் சந்தீப் ஷாம் இயக்கியுள்ளார். இதில்  கதாநாயகிகளாக ஜனனி ஐயர் மற்றும் ஐஸ்வர்யா மேனன் இருவரும் நடித்துள்ளனர். இப்படத்தை கே 4 கிரியேஷன்ஸ் சார்பில் கேசவன் தயாரித்துள்ளார். இதற்கு சக்தி அரவிந்த் ஒளிப்பதிவு மற்றும் ஏ.கே. பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளனர். 

சில நாட்களுக்கு முன்பு இப்படத்திற்கான ட்ரெய்லரை விஜய் சேதுபதி அவர்கள் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஆர்.ஜானு சுந்தர் அவர்களின் இசையமைப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தின் பாடல்களை நேற்றைய தினம் படக்குழு சென்னையிலுள்ள FM நிறுவனத்தில் வைத்து இசை வெளியீட்டு விழா நடத்தியுள்ளனர். இதையடுத்து இப்படத்திற்கான பாடல் ஒன்றை டி.இமான் அவரின் சமூக இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறார். இந்தப் பாடல்களை ரசிகர்கள் ரசித்து கேட்டு வருகின்றனர்.