Vadivelu Salary for Web Series
Vadivelu Salary for Web Series

சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க வடிவேலு கேட்ட சம்பளம் தயாரிப்பு நிறுவனத்தை கிடுகிடுக்க வைத்துள்ளது.

Vadivelu Salary for Web Series : தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் வடிவேலு. சமீபகாலமாக இவர் சினிமாவில் நடிக்க முடியாமல் இருந்து வருகிறார்.

இருபத்தி மூன்றாம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க ஒப்பந்தமாகி விட்டு தயாரிப்பாளர் சங்கருடன் ஏற்பட்ட பிரச்சனையால் இவருக்கு ரெட் கார்ட் போடப்பட்டுள்ளது.

இதனால் சினிமாவில் நடிக்க முடியாமல் இருந்து வருகிறார் வடிவேலு. மேலும் தற்போது இவரை படங்களில் நடிக்க வைக்க பலர் முயற்சி செய்து வருகின்றனர்.

சூரிய வம்சத்தையே மிஞ்சிட்டாங்க.. ஒரே பாட்டில் உலகளாவிய தொழிலதிபரான மணிமேகலை – இணையத்தில் வைரலாகும் வீடியோ!

அப்படி இளம் இயக்குனர் ஒருவர் முழுக்க முழுக்க காமெடி கதையை கொண்ட வெப் சீரிஸ் தொடர் ஒன்றை இயக்குவதற்காக தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக வடிவேலுவை அணுகியுள்ளார்.

8 எபிசோடுகளை கொண்ட இந்த வெப்சீரிஸ் தொடருக்கு ரூபாய் 4 கோடி சம்பளம் கேட்டு உள்ளார் வடிவேலு. Episode ஒன்றுக்கு ரூபாய் 50 லட்சம் என்று கேட்டுள்ளார்.

வடிவேலு கேட்ட இந்த சம்பளத்தால் தயாரிப்பு நிறுவனம் கிறுகிறுத்துப் போய் உள்ளது. இதனால் அந்த வெப் சீரிஸ் தொடரை தயாரிக்கும் முயற்சியையே அந்நிறுவனம் கைவிட்டு விட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன.