சிவகார்த்திகேயன் நடிப்பில் 45 கோடி வசூல் செய்த திரைப்படத்தில் நடிக்க மறுத்துள்ளார் நடிகர் வடிவேலு.

Vadivelu Rejects Sivakarthikeyan Movie : தமிழ் சின்னத்திரை தொகுப்பாளராக இருந்து வெள்ளித்திரையில் ஹீரோவாக முன்னணி நடிகராக கலக்கி வருபவர் சிவகார்த்திகேயன். இவரது திரை படத்தில் சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம்.

சிவகார்த்திகேயனின் 45 கோடி வசூல் செய்த படத்தை மிஸ் செய்த வடிவேலு - அதற்கு காரணம் என்ன தெரியுமா??

பொன்ராம் இயக்கிய இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா, சூரி, ஷாலு ஷம்மு என பலர் நடித்துள்ளனர். வெறும் 9 கோடி பட்ஜெட்டில் உருவான இத்திரைப்படம் 45 கோடி வசூல் செய்து பெரும் சாதனை படைத்தது.

அதி கனமழை : தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’

இயக்குனர் பொன்ராம் அளித்த பேட்டி ஒன்றில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற டைட்டில் வடிவேலுவை தான் குறிக்கும். அவர் தன் வின்னர் படத்தில் இந்த டயலாக்கை உருவாக்கினார். அவருக்காக இந்த படத்தின் கிளைமாக்ஸில் மிகப்பெரிய மாஸ் சீன் ஒன்றை உருவாக்கி வைத்திருந்தோம்.

Dhanush-யை தொடர்ந்து Atharvaa-வை இயக்கும் கார்த்திக் நரேன்! | Latest Cinema News | HD

ஆனால் அப்போது அவர் மற்ற படங்களில் பிசியாக இருந்ததால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது என தெரிவித்துள்ளார்.