நடிகர் வடிவேலு சமத்தாக ரீ-என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Vadivelu ReEntry in Tamil Cinema : தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் வடிவேலு. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ‌‌ 23ஆம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க ஒப்பந்தமாகி அந்த படத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அவருக்கு ரெட் கார்ட் போடப்பட்டது.

இதனால் வடிவேலு படங்களில் நடிக்காமல் இருந்து வருகிறார். இந்த நிலையில் அவர் மிக விரைவில் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. OTT-ல் ஒளிபரப்பாக உள்ள காமெடி நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க உள்ளார்.

சதம் அடிப்பதில் சிறந்தவர் அவர் மட்டுமே : சச்சின் கணிப்பு சரியா.?

அதுமட்டுமல்லாமல் சுராஜ் இயக்கும் நாய் சேகர் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படமும் நேரடியாக OTT-யில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வடிவேலுவுடன் பத்து இயக்குனர்கள் கதை சொல்லி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

Ajith-தின் அடுத்த படத்தில் Yuvan இல்லையாம்? – Thala 61 Movie Update | Latest Cinema News