பத்து ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது பிஸியான நடிகராக நடித்து வரும் வடிவேலு அடுத்ததாக விஜய் சேதுபதியுடன் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி காமெடி ஜாம்பவானாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் வடிவேலு. இவர் சில காரணங்களால் பத்து வருடங்களாக நடிப்பதில் இருந்து விலகி இருந்தார். அதையடுத்து தற்போது மீண்டும் நடிக்க தொடங்கி இருக்கும் வடிவேலு “நாய் சேகர் ரிட்டன்ஸ்” என்னும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

அடுத்ததாக விஜய் சேதுபதியுடன் நடிக்கும் வடிவேலு!!… புது காம்போவின் தகவலால் ரசிகர்கள் உற்சாகம்!.

அப்படத்தைத் தொடர்ந்து மாமன்னன் மற்றும் சந்திரமுகி 2 ஆகிய படங்களிலும் காமெடியனாக நடித்து வரும் வடிவேலு தற்போது பழையபடி பிசியான நடிகராக வலம் வருகிறார்.

அடுத்ததாக விஜய் சேதுபதியுடன் நடிக்கும் வடிவேலு!!… புது காம்போவின் தகவலால் ரசிகர்கள் உற்சாகம்!.

இந்நிலையில் அடுத்து தான் நடிக்க உள்ள படம் பற்றி வடிவேலு சமீபத்தில் அளித்த பேட்டியில் பகிர்ந்திருக்கிறார். அதாவது, திருச்செந்தூர் கோயிலுக்கு வழிபாட்டுக்கு வந்த வடிவேலு பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் “அடுத்து விஜய் சேதுபதியோடு இணைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக” கூறியிருக்கிறார். இந்த புது காம்போவின் தகவல் ரசிகர்களின் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.