வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

வைகைப்புயல் வடிவேலு அவர்கள் இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ திரைப்படத்தில் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இதில் அவருடன் இணைந்து பிக்பாஸ் ஷிவானி, சிவாங்கி, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடித்துள்ளார்கள். காமெடி திரைப்படமாக உருவாகி இருக்கும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. தற்போது படத்திற்கான இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தில் வடிவேலு பாடிய “அப்பத்தா” என்ற பாடலின் வீடியோ அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

நீண்ட இடைவேளைக்குப் பிறகு வடிவேலு கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தை காண ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்த்து எழுந்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் வெளியிட்டு உரிமையை கைப்பற்றி இருக்கும் நிறுவனங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தின் ஓடிடி உரிமையை Netflix நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அதேபோல் இப்படத்தின் தொலைக்காட்சி வெளியீட்டு உரிமையை சன் டிவி நிறுவனம் வாங்கியுள்ளதாக இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் வெளியிட்டுள்ளது.