உதயநிதி நடிகர் வடிவேலு சந்தித்திருந்த நிலையில் அதற்கான காரணம் தெரிய வந்துள்ளது.

Vadivelu Meet With Udhayanidhi Stalin : தமிழ் சினிமாவில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் உதயநிதி ஸ்டாலின். தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் மகனான இவர் படங்களில் நடித்து வருவது மட்டுமல்லாமல் அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். தற்போது சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவாக இருந்து வருகிறார்.

இது சதித்திட்டம், இதனால் கோடிக்கணக்கில் நஷ்டம் : பாகிஸ்தான் தகவல்

உதயநிதியை சந்தித்த வடிவேலு.. அதுக்குப் பின்னாடி இப்படியொரு காரணம் இருக்கா? வெளியான சுவாரஸ்ய தகவல்

மேலும் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் உதயநிதி அடுத்ததாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தோடு அவர் நடிப்பை கைவிட முடிவு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில்தான் வடிவேலு உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து இருந்தார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமாக நடந்தது என கூறப்பட்டு வந்தது. ஆனால் தற்போது இது குறித்து சில தகவல்கள் கிடைத்துள்ளன.

பைக்கில் உலகம் சுற்ற தயாராகும் Thala Ajith – சாகசப் பெண்ணிடம் ஆலோசனை!

அதாவது உதயநிதி ஸ்டாலின், மாரிசெல்வராஜ் கூட்டணியில் உருவாக உள்ள படத்தில் வடிவேலு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மரியாதை நிமித்தமாக நடந்த சந்திப்பில் இது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது. ‌