இருபது வருடத்திற்கு பிறகு அஜித்துடன் இணைய உள்ள பிரபல நடிகர் ஒருவர்.

Vadivelu Join With Ajith : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள திரைப்படம் வலிமை. இந்தப் படத்தைத் தொடர்ந்து மீண்டும் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாக உள்ள ajith61 படத்தில் நடிக்க உள்ளார்.

அதனைத் தொடர்ந்து லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக உள்ள அஜித் 62 என்ற படத்தில் நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது.

மேலும் இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அஜித்தின் 63-வது திரைப்படம் உருவாக உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த படத்தில் நடிகர் வடிவேலு அஜித்துடன் இணைந்து நடிக்க இருப்பதாகவும் கூடுதல் தகவல் கிடைத்துள்ளது.

ஒருவேளை அஜித் வடிவேலு கூட்டணி உறுதியானால் 20 வருடங்களுக்கு முன்னர் வெளியான ராஜா படத்திற்கு பிறகு மீண்டும் இந்த கூட்டணி அமைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அஜித் வடிவேலு கூட்டணி பார்க்க ரசிகர்கள் ஆவலோடு இருப்பதாக கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.