நாய் சேகர் படத்தை தொடர்ந்து நடிகர் வடிவேலு யாருடைய இயக்கத்தில் நடிக்க போகிறார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Vadivelu in Upcomming Movie : தமிழ் சினிமாவில் காமெடி ஜாம்பவானாக வலம் வருபவர் வடிவேலு. காமெடி குணச்சித்திர வேடம் ஹீரோ என பல்வேறு வேடங்களில் நடித்துள்ளார். பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் தயாரிப்பில் 24ம் புலிகேசி படத்தில் நடிக்க ஒப்பந்தமான நிலையில் படக் குழுவினருடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக வடிவேலுவுக்கு ரெட் கார்டு போடப்பட்டது.

தமிழகத்தில், நீட் தேர்வு முடித்த மாணவர்களுக்கு ‘கவுன்சிலிங்’ : சுகாதாரத்துறை அறிவிப்பு

இதனையடுத்து வடிவேலுக்கு நடிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது. அவர் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் சுராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் நாய் சேகர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நாய் சேகர் படம் மட்டுமல்லாமல் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் அடுத்து மூன்று படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.

நாய் சேகர் படத்தை தொடர்ந்து நடிகர் வடிவேலு யாருடைய இயக்கத்தில் நடிக்க போகிறார் தெரியுமா??

இந்த நிலையில் தற்போது நடிகர் வடிவேலு அடுத்ததாக இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

முடிவுக்கு வரும் Beast படப்பிடிப்பு! – Release எப்போ தெரியுமா?

இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் விரைவில் எதிர்பார்க்கலாம் என கூறப்படுகிறது.