Vadivelu in Upcoming Movies

வடிவேலுவின் அடுத்த இரண்டு திரைப்படங்கள் பற்றி அதிரடியான தகவல் வெளியாகியுள்ளது.

Vadivelu in Upcoming Movies : தமிழ் சினிமாவில் காமெடி கிங்காக வலம் வருபவர் வைகைப்புயல் வடிவேலு. அன்று முதல் இன்று வரை மக்கள் அனைவரும் ரசிக்கும் காமெடியனாக இருந்து வருகிறார் வடிவேலு.

ஆனால் கடந்த 10 வருடங்களாக இவர் எந்த படத்திலும் நடிக்காமல் இருந்து வருகிறார். இந்த நிலையில் இவருடைய அடுத்த இரண்டு படங்கள் பற்றிய தகவல் கிடைத்துள்ளது.

மெட்டி ஒலி என்ற சீரியலை இயக்கி பிரபலமான திருமுருகன் இயக்க உள்ள புதிய படத்தில் வடிவேலு மற்றும் ஆர் ஜே பாலாஜி ஆகியோர் இணைந்து நடிப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

அதே போல் சூர்யா நடிப்பில் உருவாக உள்ள புதிய படத்திலும் வடிவேலு நடிக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

வடிவேலு இறுதியாக சூர்யா நடிப்பில் வெளியான ஆதவன் படத்தில் தான் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.