Vadivelu in Thalainagaram 2
Vadivelu in Thalainagaram 2

நடிகர் வடிவேலு சூப்பர் ஹிட்டான இரண்டாம் பாகத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Vadivelu in Thalainagaram 2 : தமிழ் சினிமாவின் நகைச்சுவை ஜாம்பவானாக வலம் வருபவர் வடிவேலு. தற்போது இவர் எந்த படங்களில் நடிப்பதில்லை. இருப்பினும் இவரது இடத்தை இன்னமும் எந்த ஒரு காமெடி நடிகராலும் நிரப்ப முடியவில்லை.

வடிவேலுவின் இடம் இன்னும் அப்படியே வெற்றிடமாகவே இருக்கிறது. இந்த இடத்தை நிரப்ப மீண்டும் வடிவேலு என்ட்ரி கொடுக்க உள்ளார்.

கமலுக்கு மீண்டும் ஜோடியாகிறாரா பூஜா குமார்?? தலைவன் இருக்கிறான் படம் குறித்து வெளியான தகவல்!

இயக்குனர் ஷங்கர் உடன் ஏற்பட்ட பிரச்சனையால் அவர் நடிக்க முடியாமல் இருந்து வருகிறார். இந்த நிலையில் இவர் அடுத்ததாக சுந்தர் சி நடிப்பில் வெளியான தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகத்தில் வடிவேலு நடிக்க உள்ளாராம்.

இந்த படத்தை வி இசட் துரை இயக்க நாயகனாக சுந்தர் சி-யே நடிக்க இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

வி இசட் துரை தற்போது நடிகரும் இயக்குனருமான அமீரை வைத்து நாற்காலி என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.