வைகைப்புயல் வடிவேலு அவர்கள் தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று ஆடல் பாடல் என குத்தாட்டம் போட்டு மாணவர்களை குஷி படுத்தியுள்ளார்.

கோலிவுட் திரை உலகில் கவுண்டமணி செந்தில் காம்போவின் காமெடியை தொடர்ந்து ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்து தனக்கென தனி ஸ்டைலை உருவாக்கி பிரபலமானவர்தான் வைகை புயல் வடிவேலு. தனது பாடி லாங்குவேஜ் மூலமாகவே ரசிகர்களை கவரும் இவர் சில பல காரணங்களால் சினிமா துறையில் இருந்து சில வருடங்கள் ஒதுங்கி இருந்தார். இருப்பினும் இவரது காமெடிகளை வைத்து மீம்ஸ் கிரியேட்டர்கள் அனைவரையும் உற்சாகப்படுத்தி வந்தனர்.

ஆடல் பாடலுடன் மாணவர்களை குஷி படுத்திய வடிவேலு!!!… கலக்கலான வீடியோ ட்ரெண்டிங்!.

தற்போது நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிப்பில் களம் இறங்கி இருக்கும் வடிவேலு நாய் சேகர் ரிட்டன்ஸ், சந்திரமுகி 2, மாமன்னன் என வரிசையாக பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

ஆடல் பாடலுடன் மாணவர்களை குஷி படுத்திய வடிவேலு!!!… கலக்கலான வீடியோ ட்ரெண்டிங்!.

இந்நிலையில் சமீபத்தில் தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உள்ள வடிவேலு அங்குள்ள மாணவர்களை குஷிப்படுத்தும் வகையில் தான் நடித்திருந்த ‘எட்டணா இருந்தா எட்டூரும் எம்பாட்ட கேட்கும்’ என்ற பாடலை பாடியும், ஆடியும் மாணவர்களை உற்சாகப்படுத்தியுள்ளார் அந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் பயங்கரமாக ட்ரெண்டிங் ஆகி வருகிறது.