Vadivelu
பிரபல நடிகருடன் சேர்ந்து வடிவேலு குத்தாட்டம் போட்டுள்ளார், அந்த வீடியோ இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வருபவர் வடிவேலு. நகைச்சுவை நாயகன், மீம்ஸ் கிரியேட்டர்களின் கடவுளாக வலம் வருபவர்.

இவர் தற்போது படங்களில் நடிக்க முடியாமல் இருந்தாலும் தினம் தினம் இவர் நம் வாழ்வில் ஏதோ ஒரு வகையில் வந்து கொண்டு தான் இருக்கிறார்.

சன் குடும்ப விருதுகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள வடிவேலு ராகவா லாரன்சுடன் சேர்ந்து மேடையில் குத்தாட்டம் போட்டுள்ளார்.

அந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி பலரையும் கவர்ந்து வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.