Vadivelu Condolences to Vadivel Balaji Death
Vadivelu Condolences to Vadivel Balaji Death

சின்னத்திரை நடிகர் வடிவேலு பாலாஜியின் மறைவிற்கு வைகைப்புயல் வடிவேலு செய்த விஷயம் பலரையும் நெகிழ வைத்துள்ளது.

Vadivelu Condolences to Vadivel Balaji Death : தமிழ் சின்னத்திரையில் காமெடி நடிகராக வலம் வருபவர் வடிவேல் பாலாஜி. இவர் உடல்நலக் குறைபாடு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவருடைய மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள் திரையுலக பிரபலங்கள் பொதுமக்கள் என பலரும் வடிவேல் பாலாஜி மறைவிற்கு நேரிலும் சமூக வலைதளப் பக்கங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் விஜய் சேதுபதி, விஜய் டிவி பிரபலங்கள் உள்ளிட்டோர் நேரில் சென்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

இவர்களைத் தொடர்ந்து வைகை புயல் வடிவேலு சின்னத்திரை நடிகர் வடிவேலு பாலாஜியின் மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியதாகவும் தன்னுடைய குடும்பத்தை உள்ள 150 பேரும் வடிவேல் பாலாஜி மறைவிற்கு இரங்கல் தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.