Vadivelu Balaji Passes Away
Vadivelu Balaji Passes Away

சின்னத்திரை நடிகர் வடிவேல் பாலாஜி மரணம் அடைந்த சம்பவம் ஒட்டுமொத்த திரையுலகையம் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Vadivelu Balaji Passes Away : தமிழ் சின்னத்திரையில் பிரபல நடிகராக வலம் வடிவேல் பாலாஜி. குறிப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளின் மூலம் ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தவர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் கூட நடுவராக இவர் பங்கேற்றுள்ளார்.

வெள்ளித் திரையிலும் படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து வருகிறார். தற்போது 42 வயதாகும் இவர் உடல் நலக் குறைபாடு காரணமாக உயிரிழந்துள்ளார்.

இவருடைய மறைவு சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இளம் வயதான வடிவேல் பாலாஜி மரணச் செய்தியைக் கேட்ட ரசிகர்கள் மீள முடியாத சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.