அது நான் இல்லை யாரும் நம்ப வேண்டாம் என வடிவேலு விளக்கம் அளித்துள்ளார்.

Vadivelu About Social Media : தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் வடிவேலு. இவரது நடிப்பில் அடுத்ததாக நாய் சேகர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை சுராஜ் இயக்குகிறார்.

சோமவார தினத்தில், சந்திரனுக்கு சிவன் தந்த அடைக்கலம்.!

அது நான் இல்லை யாரும் நம்பாதீங்க.. வடிவேலு கொடுத்த அதிர்ச்சி.!!

அதுமட்டுமல்லாமல் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் மேலும் 4 படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இருபத்தி நான்காம் புலிகேசி படத்தின் காரணமாக வடிவேலுக்கு ரெட்கார்ட் போடப்பட்டு இருந்த நிலையில் தற்போது அது நீக்கப்பட்டது காரணமாக அவர் படங்களில் நடிக்க துவங்கியுள்ளார்.

என்ன வச்சி படம் எடுக்க பயந்தாங்க! – மேடையில் Emotional ஆன Shanthnu Bhagyaraj | Murungakkai Chips

இந்த நிலையில் நடிகர் வடிவேலு அளித்துள்ள பேட்டி ஒன்றில் இனி சங்கர் இயக்கத்திலோ அல்லது தயாரிப்பிலோ நடிக்க மாட்டேன் என கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் என்னுடைய பெயரில் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் நிறைய கணக்குகள் உலா வருகின்றன. ஆனால் நான் எந்தவொரு சமூக வலைதளப் பக்கத்திலும் இல்லை என தெரிவித்துள்ளார்.

இதனால் வடிவேலுவை டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் பின்தொடர்வதாக நினைத்துக் கொண்டிருந்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.