Vadivasal Dubbing Rights Update

படம் தொடங்குவதற்கு முன்பாகவே வாடிவாசல் படத்தின் வியாபாரம் நடந்து முடிந்துள்ளது.

Vadivasal Dubbing Rights Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் தற்போது சூர்யா நாற்பது என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

நாளை சூர்யாவின் பிறந்த நாள் என்பதால் இன்று சூர்யா 40 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட சன் பிக்சர்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள வாடிவாசல் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

என் திறமை மீது, டிராவிட்டுக்கு நம்பிக்கை உண்டு : ‘ஆட்டநாயகன்’ தீபக் சாஹர்

விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கப்பட உள்ளது. இந்த படத்தினை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்காத நிலையில் இந்த படத்தின் இந்தி டப்பிங் உரிமையை கோல்டன் மைன் என்ற நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

விரைவில் Sundhara Travels இராண்டம் பாகம்! – Murali – Vadivelu-க்கு பதில் இவர்களா? | Cinema News

பல தமிழ் படங்களில் டப்பிங் உரிமையை இந்நிறுவனம் கைப்பற்றியிருந்த நிலையில் தற்போது வாடிவாசல் படத்தின் உரிமையையும் கைப்பற்றி உள்ளது. இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.