ட்விட்டர் பக்கத்தில் திடீரென்று ட்ரெண்டிங்காகும் வட சென்னை 2 ஹேஷ்டேக் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் வாத்தி திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்திற்கான அப்டேட்களுக்காக ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் திடீரென்று twitter பக்கத்தில் வட சென்னை திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த ஹேஷ்டேக் வைரலாக பரவி வருகிறது. வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்ததை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்காக வெகு நாட்களாக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் தற்போது எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் ஆர்யா நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தார் சார்பட்டா பரம்பரை திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் அறிவிப்பால் தனுஷ் ரசிகர்கள் வடசென்னை 2 திரைப்படத்தின் ஹேஷ்டேக்கை ட்விட்டரில் திடீரென ட்ரெண்டிங்காக்கி வருகின்றனர்.